5. கச்சிநெறிக் காரைக்காடு:

காஞ்சியில் அமைந்துள்ள தேவாரத் தலங்கள் ஐந்து (கச்சி ஏகம்பம், கச்சி மேற்றளி, ஓணகாந்தன் தளி, கச்சி அனேகதங்காவதம், கச்சிநெறிக் காரைக்க்காடு). 

'நெறிக் காரைக்க்காடு' தற்கால வழக்கில் திருக்காலிமேடு என்று அறியப் பெற்று வருகின்றது, சிவமூர்த்தி இங்கு சத்யநாதேஸ்வரர்; சத்ய விரதேஸ்வரர் எனும் திருநாமங்களில் எழுந்தருளி இருக்கின்றார். திருஞானசம்பந்த மூர்த்தியால் பாடல் பெற்ற சிறப்புப் பொருந்தியது. நவக்கிரக தேவனான புதனும்; இந்திரனும் பூசித்துப் பேறு பெற்றுள்ள தலம். தட்சிணாயன; உத்தராயன காலங்களில் வெவ்வேறு திருமேனி நிறத்தினராய் சுவாமி திருக்காட்சி அளித்தருள்வார் என்று அர்ச்சகர் மூலம் அறிகின்றோம். 

(திருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 1)
வாரணவு முலைமங்கை பங்கினராய் அங்கையினில்
போரணவு மழுவொன்றங்கேந்தி வெண் பொடிஅணிவர்
காரணவு மணிமாடம் கடைநவின்ற கலிக்கச்சி
நீரணவு மலர்ப்பொய்கை நெறிக்காரைக் காட்டாரே

No comments:

Post a Comment